அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி கலாச்சார அவலம் : 32 ஆண்டுகளில் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 11,10,421 பேர் இறந்ததாக அதிர்ச்சி தகவல்
Dec 1 2022 5:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் கடந்த 32 ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 11 லட்சத்து 10 ஆயிரத்து 421 பேர் இறந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. மருத்துவ இதழ் ஒன்றில் வெளியான அறிக்கை ஒன்றில், கடந்த ஆண்டு மட்டும் துப்பாக்கி சூட்டில் 48 ஆயிரத்து 953 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாக் பிரைடே சலுகை விலை விற்பனையை பயன்படுத்தி ஏராளமானோர் துப்பாக்கிகளை வாங்கி குவித்ததாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் 100 அமெரிக்கர்களுக்கு 120 துப்பாக்கிகள் உள்ளதாக சிறிய துப்பாக்கிகள் பயன்பாடு குறித்து சுவிட்சர்லாந்து ஆய்வாளர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.