சீனாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலையுதிர் கால அறுவடைப் பணிகள் - 34 சதவிகித பணிகள் நிறைவடைந்ததாக அறிவிப்பு

Oct 3 2022 6:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் இலையுதிர்கால அறுவடைப் பணிகளில் 34 சதவிகிதம் நிறைவடைந்து விட்டதாக அந்நாட்டு அரசுச் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இலையுதிர் காலத்திற்கான பருவத்தில் சுமார் 7 கோடியே 42 லட்சம் ஏக்‍கர் பரப்பளவில் அறுவடைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், நாடு முழுவதும் நடைபெறும் இப்பணிகளில் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு தானியங்கள் அறுவடை செய்யப்படுவதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. சோயா பீன்ஸ், கோதுமை உள்ளிட்ட தானியங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே விளைந்திருப்பதாகவும், சில பகுதிகளில் வரலாற்றில் இல்லாத அளவுக்‍கு அதிக விளைச்சல் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மையில் நவீனத்தைப் புகுத்துவதற்காக அந்நாட்டு வேளாண் கடனுதவி அளிக்‍கும் வங்கிகள் சுமார் 3 லட்சம் கோடி ரூபாயை விவசாயிகளுக்‍கு கடனாக அளித்துள்ளதாகவும், அறுவடைப் பணிகளைப் பொறுத்தளவில் தற்போது வரை 34 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00