எகிப்து தேவாலயத்தில் திடீர் தீ விபத்து : சிறப்பு ஆராதனையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு - படுகாயமடைந்த 55 பேர் மருத்துவமனைகளில் அனுமதி

Aug 14 2022 6:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

எகிப்தில் தேவாலயம் ஒன்றில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். 55 பேர் படுகாயமடைந்தனர்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஞாயிற்றுக்‍கிழமை சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு தேவாலயத்தில் இருந்தவர்களில் 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 55 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடன​டியாக மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டனர். உயிரிழந்தவ​ர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ​என்றும், மின்கசிவே தீ விபத்துக்‍கு காரணம் எனவும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த பலரின் நிலை கவலைக்‍கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்‍கை மேலும் அதிகரிக்‍கும் என அஞ்சப்படுகிறது. இம்பாபா மாவட்டத்தில் உள்ள இந்த தேவாலயத்தில் தொழிலாளர்கள் பலரும் ஞாயிற்றுக்‍கிழமை சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்பது வழக்‍கம்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00