கொரோனாவின் முந்தைய மாறுபாடான டெல்டாவை விட ஒமைக்ரான் தீவிரமானது அல்ல - அமெரிக்க அரசின் கொரோனா ஆலோசகர் கருத்து

Dec 8 2021 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனாவின் முந்தைய மாறுபாடான டெல்டாவை விட ஒமைக்ரான் தீவிரமானது அல்ல என்று அமெரிக்க தொற்று நோய் நிபுணரும், அமெரிக்க அரசின் கொரோனா ஆலோசகருமான டாக்டர் ஆண்டனி பாசி தெரிவித்துள்ளார்.

புதிய வகை கொரோனா வைரசான ஒமைக்ரான் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், ஒமைக்ரான் வைரஸ் குறித்து அமெரிக்காவின் தொற்று நோய் நிபுணர் ஆண்டனி பாசி கருத்து தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் உருவாகி பல நாடுகளில் பரவி வரும் புதிய கொரோனா மாறுபாடான ஒமைக்ரான் வைரசானது வேகமாக மிக பரவக்கூடிய ஒன்று என்றும், கொரோனாவின் முந்தைய மாறுபாடான டெல்டாவை விட தீவிரமானது அல்ல என்றும் கூறியுள்ளார். மேலும், ஒமைக்ரான் நோயாளிகள் மருத்துவமனையில் அதிகமாக அனுமதிக்கப்படுவார்கள் எனவும், ஆனால் இறப்புகள் அதிகமாக இருக்காது எனவும் டாக்டர் ஆண்டனி பாசி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00