அணிவிக்‍கப்பட்ட கிரீடத்தை மேடையிலேயே திரும்பப் பறித்த நிகழ்வு - கிரீடத்தைப் பறித்த 'திருமதி உலகம்' கரோலினா ஜுரி கைதுக்‍குப் பின் விடுதலை

Apr 8 2021 7:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
மிஸ்ஸஸ் இலங்கையின் கிரீடத்தை மேடையிலேயே பறித்த மிஸ்ஸஸ் வோர்ல்ட் கரோலினா ஜுரி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்‍கப்பட்டார்.

இலங்கையில் கடந்த சில தினங்களுக்‍கு முன் நடைபெற்ற திருமதி இலங்கை போட்டியில் புஷ்பிகா டீ சில்வா தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர் அவருக்‍கு அதற்கான கிரீடத்தை மிஸ்ஸஸ் வோர்ல்ட், கரோலினா ஜுரி அணிவித்தார். ஆனால் அதன் பின் சில வினாடிகளில், புஷ்பிகா டீ ​சில்வா திருமணமாகி விவாகரத்து பெற்றதால் அவருக்‍கு அணிவிக்‍கப்பட்ட கிரீடத்தை திரும்பப்பெறுவதாக அறிவித்த ஜுரி, யாரும் எதிர்பாராத வகையில் அந்த கிரீடத்தை அகற்றி, இரண்டாம் இடத்திலிருந்த மற்றொரு பெண்ணுக்‍கு அதை அணிவித்தார். இதையடுத்து, புஷ்பிகா டீ சில்வா சோகமாக அங்கிருந்து வெளியேறினார். ஆனால், அவர் கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்றும், விவாகரத்து பெறவில்லை என்றும் தெரியவந்ததையடுத்து, நேற்று முன்தினம் மீண்டும் அவருக்‍கு கிரீடம் அணிவிக்‍கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மிஸ்ஸஸ் வோர்ல்ட், கரோலினா ஜுரி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்‍கப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00