வியட்னாம் நாட்டில் ஒரு மாதமாகத் தொடர்ந்து பெய்யும் பலத்த மழை - வெள்ளத்தில் சிக்‍கித் தவிக்‍கும் கிராம மக்‍கள்

Oct 20 2020 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
வியட்னாம் நாட்டில் ஏற்கெனவே பெய்த மழையில் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில், மீண்டும் பெருமழை பெய்யும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு அரசு எச்சரிக்‍கை விடுத்துள்ளது.

இம்மாத தொடக்‍கத்தில் இருந்து நாட்டின் மத்திய பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக எராளமான கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டு பல இடங்களில் கரையை உடைத்துக்கொண்டு குடியிருப்புப் பகுதிகளுக்‍குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஒரு லட்சத்து 78 ஆயிரம் வீடுகள் தண்ணீரில் மூழ்கியிருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதே போல் பல்லாயிரக்‍கணக்‍கான ஏக்‍கர் பரப்பிலான விளை பொருட்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன என்றும் 7 லட்சம் கால்நடைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தன என்றும் அதிகாரப்பூர்வமாக அரசு அறிவித்துள்ளது. மேலும், வெள்ள பாதிப்பில் ஏற்கெனவே 105 பேர் உயிரிழந்த நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 27 பேரைத் தேடும் முயற்சியில் எந்த பயனும் ஏற்படவில்லை. இதற்கிடையே மீண்டும் பலத்த மழை பெய்யும் என தற்போது எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00