அமெரிக்காவில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பற்றி எரியும் தீ : பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம்

Aug 2 2020 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் காட்டுத் தீ பற்றி எரிவதால், சுமார் எட்டாயிரம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கலிஃபோர்னியா மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள செர்ரி பள்ளத்தாக்கு பகுதியில் பற்றிய காட்டுத் தீ, சுமார் நான்காயிரம் ஏக்கர் பரப்பளவில் பரவியது. இதற்கு ஆப்பிள் ஃபயர் என பெயரிடப்பட்டுள்ளது. ஏராளமான தீ அணைப்பு வீரர்களின் முயற்சிக்குப் பின்னும் கொழுந்து விட்டு தீ எரிவதால், புகை மூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 ஆயிரத்து 600 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 800 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கடந்த இரு தினங்களுக்கு முன் 700 ஏக்கர் பரப்பளவில் எரிந்த தீ தற்போது பல பகுதிகளுக்கும் பரவியுள்ளது. காற்றின் வேகம், தட்பவெப்ப நிலை காரணமாக தீயைக் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக தீ அணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00