2036 ஆம் ஆண்டு வரை விளாடிமிர் புதின் அதிபராக பதவி வகிக்கும் அரசியல் சாசனம் குறித்த வாக்‍கெடுப்பு - பெருவாரியான ரஷ்ய மக்‍கள் ஆதரவு

Jul 2 2020 10:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 2036 ஆம் ஆண்டு வரை அதிபராக பதவி வகிக்கும் அரசியல் சாசனத்திற்கு அந்நாட்டு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

ரஷ்ய நாட்டு அரசியல் சாசனப்படி ஒருவரே தொடர்ந்து இரு முறைக்கு மேல் அதிபர் பதவியில் நீடிக்க முடியாது. கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டு வரை அதிபர் பதவியில் இருந்த புதின், பின் 2008-ம் ஆண்டில் இருந்து 2012-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். பின்னர், கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து, விளாடிமிர் புதின் அந்நாட்டு அதிபர் பதவியை வகித்து வருகிறார்.

இந்நிலையில், அவரது பதவிக்காலத்தை 2036-ம் ஆண்டு வரை நீட்டிப்பது குறித்து, அரசியலமைப்பில் மாற்றம் செய்ய திட்டமிட்டு பாராளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது. எனினும் மக்களின் வாக்காளர்களின் ஒப்புதலும் மிக முக்கியமானது என்று கூறிய புதின், வாக்கெடுப்பை நடத்தினர். அதிபர் புதினும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், புதினுக்கு 76.9 சதவிகித வாக்குகள் ஆதரவாக கிடைத்துள்ளன. இதன்மூலம் அவரது பதவிக்காலம் நீட்டிப்பு குறித்த அரசியல் சாசன சீர்திருத்தத்திற்கு பேராதரவு கிடைத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00