ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது பதவிக்காலத்தை நீட்டிக்கச் செய்யும் வாக்கெடுப்பு : வாக்கை பதிவு செய்தார் அதிபர் புடின்

Jul 1 2020 6:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தனது பதவிக்காலத்தை 2036-ம் ஆண்டு வரை நீட்டிப்பது தொடர்பான, அரசியலமைப்பு திருத்த வாக்கெடுப்பில், இன்று தனது வாக்கை பதிவு செய்தார்.

ரஷ்யாவில் அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். அந்நாட்டு அரசியல் சாசனப்படி ஒருவரே தொடர்ந்து இரு முறைக்கு மேல் அதிபர் பதவியில் நீடிக்க முடியாது. கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டு வரை அதிபர் பதவியில் இருந்த புதின், பின் 2008-ம் ஆண்டில் இருந்து 2012-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். பின்னர், கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து, விளாடிமிர் புடின் அந்நாட்டு அதிபர் பதவியை வகித்து வருகிறார். வரும் 2024-ம் ஆண்டு வரை அவருக்கு பதவிக்காலம் உள்ளது. தற்போது, அவரது பதவிக்காலத்தை மேலும் இரு முறை, அதாவது 2036-ம் ஆண்டு வரை நீட்டிப்பது குறித்து, அரசியலமைப்பில் மாற்றம் செய்ய திட்டமிட்டு, அதற்கான வாக்கெடுப்பு கடந்த 25-ம் தேதி தொடங்கியது. கடைசி நாளான இன்று, அதிபர் புடின் தனது வாக்கினை பதிவு செய்தார். இந்த வாக்கெடுப்பு, புடினுக்கு சாதகமாகவே முடியுமென கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00