கருப்பின இளைஞர் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட வழக்கு - குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், காவலருக்கு 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை

Jun 4 2020 2:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நான்கு போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், கருப்பின இளைஞரை கொன்ற காவலருக்கு 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

அமெரிக்காவின் Minneapolis நகரில் கடையில் கள்ள நோட்டு கொடுத்த புகாரில் George Floyd என்ற கருப்பின இளைஞரை பிடித்து விசாரணை நடத்திய Derek Chauvin என்ற காவலர், அவரை கீழே தள்ளினார். தொடர்ந்து Floyd -னின் கழுத்தை தனது கால் முட்டியால் நெருக்கியதில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இச்செயலைக்‍ கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன.

இச்சம்பவம் தொடர்பாக Derek Chauvin, Thomas Lane, J.Alexander Kueng, Tou Thao ஆகிய நான்கு காவலர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் Floyd-ஐ கொன்ற Derek Chauvin-க்கு 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். அதேசமயம், மற்ற மூன்று காவலர்கள் மீதும், கொலைக்கு உதவியாக இருந்தது, கொலை செய்ய தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே புகாருக்‍கு ஆளான காவல் அதிகாரி Derek Chauvin-னுக்‍கு நியமிக்‍கப்பட்ட கெல்லி என்ற வழக்கறிஞர் மாற்றப்பட்டுள்ளார். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர் மாற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது எரிக் நெல்சன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00