புனித பைபிளை அரசியலுக்கு பயன்படுத்தியதை ஏற்க முடியாது : அதிபர் ட்ரம்புக்கு மறைமாவட்ட பிஷப் கண்டனம்

Jun 3 2020 11:45AM
எழுத்தின் அளவு: அ + அ -
வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள St. John's Episcopal தேவாலயத்தின் முன் அதிபர் ட்ரம்ப் அரசியலுக்காக புனித பைபிளை பயன்படுத்தியதாக பிஷப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இனவெறி காரணமாக கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாயிட் என்பவர் காவல்துறையினரால் கொல்லப்பட்டதை கண்டித்து, அதிபர் ட்ரம்புக்கு எதிராக வெள்ளை மாளிகை முன்பும் போராட்டம் நடைபெற்றது. அப்போது, அதிபர் டிரம்ப்பின் வருகைக்காக, போலீசார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். இந்த மோதலில் வெள்ளை மாளிகை அருகில் இருந்த St. John's Episcopal தேவாலயத்தின் ஒருபகுதி சேதமடைந்தது. இதனைத்தொடர்ந்து அந்த தேவாலயத்திற்கு வந்த அதிபர் ட்ரம்ப் தேவாலயத்தில் இருந்த புனித பைபிளை எடுத்துவந்து செய்தியாளர்களிடம் காட்டி தேவாலயமும்,வேதமும் அன்பை போதிப்பதாக தெரிவித்தார்.

அதிபர் ட்ரம்பின் இந்த செயலுக்கு St. John's Episcopal தேவாலயத்தின் பிஷப் அருட்திரு. Mariann Budde, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புனிதமான அந்த தேவாலயத்திற்கு வரும் அமெரிக்க அதிபர்கள் முதலில் பிரார்த்தனை செய்துவிட்டு செல்வதுதான் வழக்கம். ஆனால் ட்ரம்ப் தேவாலயத்தின் புனித பைபிளை அனுமதி இல்லாமல் எடுத்துவந்து அவரது அரசியல் நடவடிக்கைக்கு பயன்படுத்தியதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் தேவாலயம் முன்பாக அமைதியாக போராடிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது ஏற்கத் தக்கதல்ல என கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதேபால இந்த தேவாலயத்தின் தலைவரான மைக்கேல் கரியும் அதிபர் ட்ரம்புக்கு கண்டம் தெரிவித்துள்ளார். தேவாலயத்தையும், புனித பைபிளையும் அதிபர் ட்ரம்ப் தனது சொந்த அரசியலுக்கு பயன்படுத்தியுள்ளதாக அறிக்கை வெளிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00