சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 46 ஆயிரத்தை தாண்டியது - 54 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்‍கு வைரஸ் தொற்று

May 25 2020 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்துள்ளது. 3 லட்சத்து 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர்.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், சர்வதேச அளவில் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. உலக அளவில் அதிகம் பாதிப்புக்‍கு உள்ளான அமெரிக்காவில் இதுவரை 99 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 16 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரசிலில் 3 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்‍கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்‍கை 22 ஆயிரத்தை கடந்துள்ளது.

ரஷ்யாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 44 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 3 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் இதுவரை 2 லட்சத்து 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். 28 ஆயிரத்து 628 பேர் உயிரிழந்துவிட்டனர்.

பிரிட்டனில் 2 லட்சத்து 57 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ள நிலையில், 36 ஆயிரத்து 600-க்‍கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்.

இத்தாலியில் 2 லட்சத்து 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்துள்ளது. 3 லட்சத்து 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00