உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை கடந்தது

Apr 2 2020 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகளவில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 48 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவது, உலக மக்க‌ளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு, சர்வ‍தேச அளவில் இதுவ‌ரை, 47 ஆயிரத்து 192 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில், 2 லட்சத்து 15 ஆயிரத்து 344 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 5 ஆயிரத்து 112 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும், 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஆயிரத்து 49 பேர் பலியாகியுள்ளனர்.

இத்தாலியில், கொ‍ரோனா வைரசால், 13 ஆயிரத்து 155 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 574 பேர் வைரஸ் தொற்றால் பா‌திக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் இத்தாலியில், 727 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில், ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 118 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 9 ஆயிரத்து 387 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் ‍‍நேற்று ஒரே நாளில், 923 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில், 81 ஆயிரத்து 554 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், 3 ஆயிரத்து 312 பேர் பலியாகியுள்ளனர். ஜெர்மனியில், 77 ஆயிரத்து 981 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 931 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில், 56 ஆயிரத்து 989 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4 ஆயிரத்து 32 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சில் மட்டும், 509 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில், 2 ஆயிரத்து 352 பேர் பலியாகியுள்ள நிலையில், 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் நேற்று ஒரே நாளில், 563 பேர் பலியாகியுள்ளனர். சர்வதேச அளவில், 9 லட்சத்து 34 ஆயிர‌த்து 825 பேர் ‍கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1 லட்சத்து 93 ஆயிரத்து 989 பேர் குணமடைந்துள்ளதாக‌த் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00