ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று : அமெரிக்காவில் கொரோனாவிற்கு 550 பேர் பலி

Mar 24 2020 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவின் வுகான் நகரைப் போன்று, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரில், 50 சதவீதம் பேர் நியூயார்க்கை சேர்ந்தவர்கள் ஆவர். நேற்று ஒரே நாளில் மட்டும் அமெரிக்கா முழுவதும் 10 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா தொற்று உள்ளோரின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 734-ஆக உயர்ந்துள்ளது. இதில், நியூயார்க் நகரில் மட்டும் 20 ஆயிரத்து 875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 550 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனிடையே மருந்துப் பொருட்களை கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப், அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00