உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,384 ஆக உயர்வு - இத்தாலியில் ஒரேநாளில் மட்டும் 627 பேர் பலி

Mar 21 2020 10:46AM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு, பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 384 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் நேற்று ஒருநாளில் மட்டும் 627 பேர் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் 183 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவில், கொரோனா வைரசின் தாக்குதலால், 3 ஆயிரத்து 255 பேர் உயிரிழந்தனர். இத்தாலியில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 32 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் முதன்முதலாக பாதித்த சீனாவை விட, இத்தாலியில் பலி எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. ஈரானில் ஆயிரத்து 433 பேர் பலியாகினர். 19 ஆயிரத்து 644 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயினில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 93 ஆக உயர்ந்துள்ளது. 21 ஆயிரத்து 510 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஃபிரான்சில் 372 பேர் உயிரிழந்தனர். சுமார் 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 257 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 429 ஆக அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் 144 பேர் பலியாகினர். 3 ஆயிரத்து 269 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்கொரியாவில் 94 பேரும், ஜெர்மனியில் 68 பேரும், நெதர்லாந்தில் 106 பேரும், சுவிட்சர்லாந்தில் 56 பேரும் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 384 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 75 ஆயிரமாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 91 ஆயிரத்து 533 பேர், வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00