அமெரிக்‍க அதிபர் டிரம்ப்பின் இந்திய பயணம் இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் - வெள்ளை மாளிகை அறிவிப்பு

Feb 27 2020 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இந்தியப் பயணத்தால், இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்தப் பயணம் குறித்து, அமெரிக்க அதிபரின் அலுவலகமான, வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பால் ஏற்படும் வளர்ச்சி, முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளால், இரு நாடுகளும் பலன் பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் அரசு முறை பயணமாக இது இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு நீண்ட காலமாக தொடர்கிறது என சுட்டிக்‍காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் எரிசக்தி துறை ஏற்றுமதிக்கு மிகச் சிறந்த நாடாக இந்தியா உள்ள நிலையில், டிரம்பின் பயணத்தின்போது, இது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை வேரறுக்க, இரு தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில் தொடர்ந்து இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00