ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - விழுப்புரம் மாவட்ட காவல்துறை எச்சரிக்‍கை

Dec 13 2019 9:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
லாட்டரி சீட்டு பழக்‍கத்தால் ஏற்பட்ட கடன் காரணமாக, விழுப்புரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்‍கை விடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்த நகைச் செய்யும் தொழிலாளியான அருண் என்பவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் 3 நம்பர் லாட்டரி சீட்டு விளையாட்டில் ஏற்பட்ட கடன் ஆகியவற்றின் காரணமாக மனமுடைந்து தனது மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அருண், 3 நம்பர் லாட்டரி சீட்டால் கடனாளியாகி தற்கொலை செய்து கொள்வதாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட 5 பேரின் உடல்களும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையாளர்கள் 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, இந்த வழக்‍கு தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 280 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00