நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் எந்த முடிவும் எடுக்காமல் உள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நீக்கக்‍ கோரிக்‍கை - சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தக்கல்

Dec 13 2019 6:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஏழுவர் விடுதலையில் எந்த முடிவும் எடுக்காமல் உள்ள ஆளுநரை நீக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டிய ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித், கடந்த 15 மாதங்களாக எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில், அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது உத்தரவு பிறப்பிக்காமல், ஆளுநர் அரசியல் சாசன விதிகளை மீறியதாகவும், இதனால் அவரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட கோரியும், தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆளுநரின் செயல்பாடு, அரசியல் சாசன முடக்கத்துக்கு சமமாகும் என்றும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00