ஊரக உள்ளாட்சி வார்டு தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் - கழக வேட்பாளர்களுக்கு உற்சாக வர‍வேற்பு

Dec 13 2019 6:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊரக உள்ளாட்சி வார்டு தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்வத்துடன் வேட்புமனுக்‍களை தாக்கல் செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 12 வார்டுகளிலும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுக்‍களை தாக்‍கல் செய்தனர். அப்போது கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளுக்காக போட்டியிடும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக வேட்பாளர்கள், ஒட்டப்பிடாரம் ஒன்றிய யூனியன் அலுவலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

ஈரோடு மாநகர் மாவட்டம் கழகம் சார்பில், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளுக்‍கும், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளுக்‍கும் போட்டியிடும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தினர் வேட்புமனுக்‍களை தாக்கல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்‍கும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்‍கும் போட்டியிடும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தினர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். வேட்புமனுத் தாக்‍கலின்போது மாவட்டக்‍ கழக செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகள், ​உடனிருந்தனர்.

இதனிடையே, மதுரை கிழக்கு தொகுதிக்‍குட்பட்ட மாவட்ட ஊராட்சி குழு 20வது வார்டு உறுப்பினர் பதவிக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த வேட்பாளர், வெங்காய விலை உயர்வை கண்டிக்‍கும் வகையில், வெங்காய மாலை மற்றும் தலையில் மகுடம் அணிந்தபடி வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட, 11 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் 102 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, கழகத்தின் சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள், மதுரை கிழக்கு, மேற்கு, மேலூர், கொட்டாம்பட்டி, அலங்காநல்லூர், வாடிப்பட்டி, சோழவந்தான் ஆகிய ஒன்றிய அலுவலகங்களில், வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் 112 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, கழகத்தின் சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள், உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி, கள்ளிக்குடி, கல்லுப்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஒன்றிய அலுவலகங்களில், வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஒன்றியத்திற்குட்பட்ட நடகோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், விராலிமாயன்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், ரங்கப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும் கழக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00