தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகள் தொடர்ந்து ஏலம் - ராமநாதபுரத்தில் 16 லட்சம் ரூபாய்க்கு, ஊராட்சி தலைவர் பதவி ஏலம் போனதாக புகார்

Dec 13 2019 6:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரம் மாவட்டத்தில், பொசுக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி 16 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி சட்டவிரோதமாக ஏலம் விடப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஏனாதி, ஆதனக்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம் விடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் முதுகுளத்தூர் அருகே உள்ள பொசுக்குடி ஊராட்சியின் தலைவர் பதவி ஏலம் விடப்பட்டுவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

ஜனநாயகத்துக்கு விரோதமாக நடைபெறும் இந்த ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அக்கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அதில், பொசுக்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி 16 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாகவும், அதை பெண் ஒருவர் ஏலம் எடுத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ஜனநாயக விரோதமாக நடந்துள்ள இந்த ஏலத்தை ரத்து செய்து, முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00