அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனின் பிறந்தநாள் விழா : ஆலயங்களில் சிறப்பு வழிபாடு - அன்னதானம் வழங்கல்

Dec 13 2019 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு. டிடிவி.தினகரனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

சென்னை ஆர்.கே நகர் பகுதி கழகம் சார்பில், கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு, ஆதரவற்ற மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. ஆர்.கே.நகர். பகுதி கழக செயலாளர் திரு. பி. வெங்கடேசன், 42-வது வடக்கு வட்டக் கழக செயலாளர் திரு. குட்டி என்ற ஆனந்தராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோவை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், கோவை சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து தங்கத் தேர் இழுக்கப்பட்டது. கோவை மண்டல பொறுப்பாளர் சேலஞ்சர் திரு. துரை, வடக்கு மாவட்டக்‍ கழக செயலாளர் திரு. அலாவுதீன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பம்பல் நகரக் கழகச் செயலாளர் திரு. பி. ஜெயகோபி தலைமையில், பம்மல் நாகவல்லி அம்மன் ஆலயத்தில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் திரு. டி.ஏ. குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

வாலாஜா நகரமன்றம் சார்பில், நகர கழக செயலாளர் திரு. சுரேஷ் தலைமையில், ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மண்டல பொறுப்பாளரும், கிழக்கு மாவட்டக்‍ கழக செயலாளருமான திரு. என்.ஜி. பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொதுமக்‍களுக்‍கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக அமைப்பு செயலாளர் திரு. அப்பாதுரை, கோவை புறநகர் மாவட்டக்‍ கழக செயலாளர் தலைமையில் பொள்ளாச்சி மாரியம்மன் ஆலயத்தில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முதியோருக்‍கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்டக்‍ கழக பொருளாளர் வழக்கறிஞர் திரு.கிரி, நகர செயலாளர் திரு. K.முத்துக்குமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திரு. அன்புச் செல்வன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

திருப்பூர் மாநகர் மாவட்டம், திருமுருகன்பூண்டி பேரூராட்சி கழகம் சார்பில், ராக்கியாபாளையம் பகுதி மாரியம்மன் ஆலயத்தில் மாவட்ட கழக செயலாளர் திரு. சிட்டிசன் ஈஸ்வரன் தலைமையில் சிறப்பு பூஜைக்‍கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பூண்டி பேருராட்சி கழக செயலாளர் திரு. கணேசமூர்த்தி, அம்மா பேரவை செயலாளர் திரு. செல்வராஜ், மகளிர் அணி செயலாளர் திருமதி. நித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகர் மாவட்டம் கொங்குநகர் பகுதி கழகம் சார்பில், திருநீலகண்டபுரம் பாலமுருகன் ஆலயத்தில் மாவட்ட கழக செயலாளர் சிட்டிசன் ஈஸ்வரன் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, கழக பொதுச் செயலாளரின் பிறந்தநாளை தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00