சென்னை ஐஐடி-யில் நடந்த மாணவர்களின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கு - தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

Dec 13 2019 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை தொடர்பான வழக்‍கை சிபிஐ விசாரிக்‍கக்‍கோரி தாக்‍கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீஃப், கடந்த 9-ம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். விடுதி காப்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது.

இதனிடையே, கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு நவம்பர் வரை சென்னை ஐஐடி-யில் 5 மாணவர்கள் இதேபோல் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாலும், தொடர்ச்சியாக இத்தகைய மரணங்கள் நடந்து வருவதாலும், ஃபாத்திமா மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாலும், இந்த வழக்கை சிபிஐ போன்ற தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரணை நடத்த உத்தரவிட கோரி, இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தமிழக தலைவர் என்.அஸ்வத்தமன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், மாணவி ஃபாத்திமா லத்தீஃப் மரணம் தொடர்பாக சிபிஐ அல்லது தன்னிச்சையான அமைப்பு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்‍கல் செய்யப்பட்ட மனுவில் போதிய ஆவண ஆதாரங்கள் இல்லாததால், வழக்கை தள்ளுபடி செய்வதாக, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு தேவையான உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்க சென்னை ஐஐடி-க்‍கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00