அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்திற்கு நிலையான சின்னம் பெற உள்ளாட்சி தேர்தலில் தொண்டர்கள் பாடுபட வேண்டும் - டிடிவி தினகரன் எழுச்சி உரை

Dec 11 2019 8:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
மறைந்த மாண்புமிகு அம்மாவின் திருவுருவச் சிலை மற்றும் புதிதாக கட்டப்பட்ட விழுப்புரம் தெற்கு மாவட்டக்‍ கழக அலுவலகம் ஆகியவற்றை, கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் திறந்து வைத்தார்.

மறைந்த மாண்புமிகு அம்மாவின் திருவுருவச் சிலை மற்றும் புதிதாக கட்டப்பட்ட விழுப்புரம் தெற்கு மாவட்டக்‍ கழக அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைக்க வருகை தந்த, கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு, விக்கிரவாண்டி டோல்கேட்டில், கழக அமைப்புச் செயலாளர்கள் திரு. எஸ். சிவராஜ், திரு. என். கணபதி, திரு. கே.எஸ்.கே. பாலமுருகன், விழுப்புரம் தெற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. ஆர். பாலசுந்தரம், விழுப்புரம் வடக்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. ஏ. கெளதம்சாகர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் வரவேற்றனர்.

விழுப்புரம் புறவழிச்சாலையில், மாண்புமிகு அம்மாவின் திருவுருச் சிலையை, கழக பொதுச்செயலளார் திரு. டிடிவி தினகரன் திறந்து வைத்து கழகக்‍ கொடியை ஏற்றிவைத்தார்.

அப்போது கழக தொண்டர்களிடையே பேசிய கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், துரோகிகளிடம் சிக்‍கியுள்ள அ.தி.மு.க.வை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதுதான் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் என்றும், ஆட்சி அதிகாரத்திற்கு கவலைப்படமால் தொண்டர்கள் அனைவரும் அ.ம.மு.க.வில் இருப்பதாக தெரிவித்தார். பழனிசாமி கும்பலுக்கு முடிவு கட்ட, உள்ளாட்சி தேர்தலில் தொண்டர்கள் கடுமையாக பாடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்டக்‍ கட்சி அலுவலகத்தை, கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் திறந்து வைத்ததுடன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு அம்மாவின் திருவுருப்படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், கழக அமைப்புச் செயலாளர்கள் திரு. எஸ். சிவராஜ், திரு. என். கணபதி, திரு. கே.எஸ்.கே. பாலமுருகன், விழுப்புரம் வடக்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. ஏ. கௌதம்சாகர் உள்ளிட்ட ஏரளாமான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00