தேனி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு - ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இறுதிகெடு

Dec 11 2019 7:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேனி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு குறித்து, ஓ. பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் பதில் மனு தாக்கல் செய்ய, இறுதிக்கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். இதனை எதிர்த்து தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பாக ரவீந்திரநாத் குமார் பதில் அளிக்க உத்தரவிட்டது. அவர் பதில் மனு தாக்கல் செய்யாத நிலையில், வாக்காளர் மிலானி புதிய மனு தாக்கல் செய்தார். அவர், பதில் மனு தாக்கல் செய்யும் வரை தற்காலிகமாக எம்.பி பதவி வகிப்பதை நிறுத்திவைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்‍கு வந்தது. வழக்‍கை விசாரித்த நீதிபதி திரு. எம்.எஸ். ரமேஷ், தேர்தல் வழக்கு தொடர்பாக ஜனவரி 23-ம் தேதிக்குள் ரவீந்திரநாத் குமார் பதில் மனு தாக்கல் செய்ய கடைசிக் கெடு விதித்து உத்தரவிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00