இந்தியத் தேர்தல் ஆணையத்தால் முறைப்படி அமமுக பதிவு : டிடிவி தினகரன் மேற்கொண்ட தொடர் முயற்சிகளைப் பாராட்டி தமிழகம் முழுவதும் கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி

Dec 10 2019 9:03AM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்காக, கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மேற்கொண்ட தொடர் முயற்சிகளைப் பாராட்டி, தமிழகம் முழுவதும் கழகத் தொண்டர்களும், நிர்வாகிகளும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், பல்லாவரம் நகரப் பொறுப்பாளர்கள் திரு.ஆனந்தன், திரு.கோகுல்ராஜ் ஆகியோர் தலைமையில், குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றிய கழகச் செயலாளர் திரு.குமார் தலைமையில், மதுராந்தகம் கடைவீதியில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வேலூர் மத்திய மாவட்டம் சார்பில், வேலூர் பழைய மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு.பார்த்திபன் மாலை அணிவித்தார். கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். பின்னர் வாகனத்தில் சென்ற பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அமமுக நகரச் செயலாளர் அட்சயா முருகன் தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர். மாவட்ட துணை செயலாளர் திரு. நசீமகால்பாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், ஓசூர் டி.வி.எஸ் நகர் பகுதியில் கழகத்தினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். மேற்கு மாவட்டச் செயலாளர் திரு.மாதேவா உட்பட ஏராளமான நிர்வாகிகள் கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00