கடலூர், தேனி, மதுரை, வடசென்னை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு புதிதாக கழக நிர்வாகிகள் நியமனம் : தலைமைக்கழகம் முக்கிய அறிவிப்பு வெளியீடு

Dec 10 2019 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூர், தேனி, மதுரை, வடசென்னை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்‍கு, புதிதாக கழக நிர்வாகிகளை நியமித்து தலைமைக்‍கழகம் முக்‍கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தலைமைக்‍கழகம் வெளியிட்டுள்ள முக்‍கிய அறிவிப்பில், கழக அமைப்புச் செயலாளரும், கடலூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான திரு. K.S.K. பாலமுருகன், ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்‍கப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மேலும், அண்ணா கிராமம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. நரசா ரெட்டியார் என்கிற B.M. முத்து நரசா கடலூர் கிழக்கு மாவட்ட கழக அவைத் தலைவராகவும் - திரு. V.M. சூரியமூர்த்தி, கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலும் - கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளராக திரு. V. ராதாகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக அவைத் தலைவராக திரு. S. தர்மராஜ் நியமிக்‍கப்பட்டுள்ளார். சாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளராக திரு. A. ஈஸ்வர், காரியாப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளராக திரு. M. கருப்புராஜா, காரியாப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளராக திரு. P.R. கண்ணன் என்கிற வெயில் கண்ணன் ஆகியோர் நியமனம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய கழக மற்றும் நகர கழக செயலாளர்களை நியமித்து தலைமைக்‍கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடமலை-மயிலை ஒன்றிய செயலாளரக திரு. E.K.P. ராஜேந்திரன் - ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளராக திரு. R. ஜெயக்குமார் - பெரியகுளம் ஒன்றிய செயலாளராக குள்ளபுரம் திரு. N. கணேசன் - உத்தமபாளையம் ஒன்றிய செயலாளரக திரு. V.K.M. அயூப்கான் - கம்பம் ஒன்றிய செயலாளராக திரு. S.P. சேகரன் - தேனி ஒன்றிய செயலாளராக திரு. V.P.A. மிதுன்சக்ரவர்த்தி - போடி ஒன்றிய செயலாளராக திரு. S.T. பன்னீர்செல்வம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வடசென்னை வடக்கு மாவட்ட அவைத் தலைவராக திரு. K. பாலன் - மாவட்ட செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. P. வெற்றிவேல் - மாவட்ட இணைச் செயலாளராக திருமதி. A. கிரிஜா - மாவட்ட துணைச் செயலாளர்களாக திருமதி. R. மங்கை ரகுபதி, திரு. A.R. பழனி - மாவட்ட பொருளாளராக திரு. R. செல்வம் ஆகியோர் நியமிக்‍கப்பட்டுள்ளதாக தலைமைக்‍கழகம் அறிவித்துள்ளது. கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00