அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க டிடிவி தினகரனுக்‍கு அழைப்பு - கழக நிர்வாகிகள் சந்திப்பு

Dec 6 2019 7:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்குமாறு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை அருமனை கிறிஸ்துவ அமைப்பினர் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், அருமனை கிறிஸ்துவ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஸ்டீஃபன் சந்தித்து, கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்துகொள்ள வேண்டி, அழைப்பிதழை வழங்கினார்.

கழக சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் திரு. ஷாபுதீன், தனது மகன் ஷேக் முகமது அசாருதீன் திருமண விழாவில் பங்கேற்க வேண்டி, கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனிடம் அழைப்பிதழை வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டக் கழகச் செயலாளர் திரு. கணேஷ்குமார், மாவட்டக் கழக அவைத் தலைவர் திரு. ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் திரு. ராமலிங்கம் - இளஞ்சியம் ஆகியோரது மணிவிழாவில் கலந்துகொள்ள வேண்டி, அழைப்பிதழை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனிடம் வழங்கினர். திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. சீனிவாசன் உடனிருந்தார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் திரு. ராஜகண்ணன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் திரு. கார்த்திகேயன், தேனி மாவட்ட நிர்வாகிகளான திரு. ராஜபிரபு, திரு. பாரதி ஆகியோர், கழக மருத்துவரணித் தலைவரும், கழக அமைப்புச் செயலாளருமான டாக்டர் கதிர்காமு தலைமையில், கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்து, தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. பழனியப்பன் உடனிருந்தார்.

கழக ஐக்கிய அமீரகம் சார்பில், கழக மண்டல அமைப்பாளர்கள் திரு. ஆர்.எஸ். கண்ணன், திரு. ஏ. சிவமுருகன், திரு. எம். முருகேசன், திரு. பி. சிவசுப்பிரமணியம் மற்றும் தேனியைச் சேர்ந்த ஆர். பாஸ்கர பாபு ஆகியோர், கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். கழக அமைப்புச் செயலாளர் டாக்டர் கதிர்காமு, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. பழனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. பாலசுந்தரம், விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழக அலுவலகம் திறப்பு விழா மற்றும் கழக கொடியேற்று விழாவுக்கான அழைப்பிதழை, கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்து வழங்கினார். கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. பழனியப்பன், கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், கழக அமைப்புச் செயலாளருமான திரு. கே.எஸ்.கே. பாலமுருகன், கழக அமைப்புச் செயலாளர் திரு. வானூர் கணபதி, பெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

குவைத் மண்டல கழக அமைப்பாளர் திரு. டி. வேப்பங்குளம் எம். சக்திவேல் ராஜன், கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப் பெற்றார். கழக குவைத் மண்டலம் சார்பில் அச்சிடப்பட்ட 2020 புதுவருட நாட்காட்டியை, கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டார். குவைத் மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் திருத்துறைப்பூண்டி கே.என்.இ. தேன் தமிழன் உடனிருந்தார்.

திருப்பூர் மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் ரெஹனா பானு, கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தென்சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் விருகை திரு. டி.எஸ். கண்ணன், சைதாப்பேட்டை பகுதிக்கழகச் செயலாளர் கோட்டூர்புரம் கந்தன் உள்ளிட்டோர், திரு. டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

அண்மையில் திருமணம் நடந்து முடிந்த, சைதாப்பேட்டை பகுதிக் கழக இளைஞரணி துணைச் செயலாளர் விஜய்-கவிதாஸ்ரீ தம்பதியர், கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்து ஆசி பெற்றனர். தென்சென்னை தெற்கு மாவட்டக்கழகச் செயலாளர் திரு. விருகை டி.எஸ். கண்ணன், சைதாப்பேட்டை பகுதிக்கழகச் செயலாளர் கோட்டூர்புரம் கந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00