உசிலம்பட்டி 58-ம் கால்வாயில் மீண்டும் உடைப்பு : அரசுக்கு எதிராக விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

Dec 6 2019 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58-ம் கால்வாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், அரசுக்‍கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதனை சரி செய்யும் பணியில் பொதுப் பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து 68 புள்ளி 50 அடியாக உள்ளது. இந்நிலையில் வைகை அணையிலிருந்து 58-ம் கால்வாய் பகுதிக்கு தண்ணீர் திறக்கக்கோரி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் கடையடைப்பு, உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று 58-ம் கால்வாய் பகுதியில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனிடையே இன்று அதிகாலை டி.புதூர் என்னும் இடத்தில் 58-ம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பு காரணமாக விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பல ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் கால்வாய் உடைந்த பகுதியில் ஒன்று திரண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கால்வாய் உடைந்த பகுதியை பொதுப்பணித்துறையினர் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற உடைப்புகள் நிகழாமல் இருக்‍க மண் கால்வாயை அகற்றி, சிமெண்ட் மூலம் கால்வாய் கட்ட வேண்டுமென்று 58-ம் கால்வாய் பாசன பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00