வேகமாக நிரம்பிவரும் மதுராந்தகம் ஏரி : மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு

Dec 6 2019 9:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பிவரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. ஜான் லூயிஸ் அதனை பார்வையிட்டு ஆய்வு​செய்தார்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், மதுராந்தகம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 23 புள்ளி 3 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில், தற்போது 22 புள்ளி 9 அடியாக நீர்மட்டம் உள்ளது. ஏரி எந்த நேரத்திலும் அதன் முழு கொள்ளளவை எட்டிவிடும் என்ற நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. ஜான் லூயிஸ் நேரில் பார்வையிட்டு, 24 மணி நேரமும் ஏரியை கண்காணிக்க பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலை, தாம்பரம் தர்காஸ் சாலை, முடிச்சூர் சாலை, பெருங்களத்தூர், முடிச்சூர் வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில், வடகிழக்கு பருவ மழையால் பாதிப்புக்கு உள்ளாகிய இடங்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜான்லூயிஸ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னையா மற்றும் பொதுப்பணி, நெடுஞ்சாலை, உள்ளாட்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது முடிச்சூர் சாலை, பெருங்களத்தூர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்‍கள், குடியிப்பு பகுதியில் மழைநீர் தேங்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்‍கமளித்ததுடன், தகுந்த நடவடிக்கை எடுக்‍குமாறு ​கேட்டுக்கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00