பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் பெற்றோர்கள் சென்ற கார் மோதி விபத்து : கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Nov 21 2019 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரம்பலூர் அருகே அரியலூர் மாவட்ட ஆட்சியரின் பெற்றோர் சென்ற கார் மோதிய விபத்தில், கல்லூரி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்களம் பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்தனா. தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். கடந்த 18ம் தேதி மாலை 4 மணியளவில் துறைமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இருசக்கர வாகனம் துறைமங்கலம் மூன்று ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே அதிவேகமாக வந்த ஸ்கார்ப்பியோ கார் கீர்த்தனா ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கீர்த்தனா திருச்சி கே.எம்.சி.மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய கார் அரியலூர் மாவட்ட ஊராட்சி தலைவருக்கு ஒதுக்கப்பட்டது என்றும் அந்த காரை ஆட்சியர் ரத்னா தனது குடும்பத்தின் சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வந்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00