தோல்வி பயம் காரணமாக, உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்கும் நோக்கில், மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் - பழனிசாமி அரசுக்கு, டிடிவி கண்டனம்

Nov 21 2019 8:37AM
எழுத்தின் அளவு: அ + அ -
தோல்வி பயத்தின் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்‍கும் சதித்திட்டமாகவே, மறைமுகத் தேர்தலுக்‍கான அவசரச் சட்டத்தை எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டு வந்துள்ளதாக கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், தோல்வி பயத்தாலும், சுய அரசியல் லாபத்திற்காகவும் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தவிர்த்து வந்தது பழனிசாமி அரசு, உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பான அணுகுமுறையால் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பாணை வெளியிடுவதற்கான காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவசரம் அவசரமாக மேயர், நகர மன்ற தலைவர், பேரூராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடக்கும் என்று ஓர் அவசர சட்டத்தை இயற்றியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

மக்களிடம் செல்வாக்கை இழந்திருக்கும் இந்த நேரத்தில் நேரடித் தேர்தல் நடந்தால் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும் என்று அஞ்சியே இந்த அவசரச் சட்டத்தை பழனிசாமி அரசு கொண்டு வந்​திருக்கிறது என திரு. டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஏற்கனவே, நான்கு மாவட்டங்களை பிரித்து புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சி வார்டுகள் எப்படி பிரிக்கப்பட்டிருக்கிறது, அந்த பதவிகளுக்கான இடஒதுக்கீட்டு விவரங்கள் என்ன? என்பதையெல்லாம் எடப்பாடி அரசும், தேர்தல் ஆணையமும் திட்டமிட்டு இன்றுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை எனவும் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பார்த்தபடியே இந்தக் காரணத்தைச் சொல்லி உள்ளாட்சித் தேர்தலை நீதிமன்றத்தின் வாயிலாக தடுப்பதற்கான முயற்சிகளை திமுக மேற்கொண்டிருக்கிறது என்றும், இப்போது இந்த அவசரச் சட்டத்தின் மூலம் தேர்தலை நடத்த விரும்பாதவர்களுக்கு இன்னொரு காரணத்தையும் பழனிசாமி அரசு உருவாக்கி கொடுத்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பழனிசாமி அரசின் இந்த செயல்களையெல்லாம் பார்க்கும் போது உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என்பதில் திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுமே கைகோர்த்து செயல்படுகின்றனவோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும், உள்ளாட்சி அமைப்புகளை சீரழிக்கும் சுயநலம் கலந்த இந்த நடவடிக்கைகளை தமிழக மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இரு கட்சிகளும் மறந்துவிடக் கூடாது என்றும் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அந்த அறிக்‍கையில் எச்சரித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00