மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் - ஆணை பிறப்பித்தது தமிழக அரசு
Nov 20 2019 7:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை டிசம்பர் 13-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. அரசியல் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மேயரை தேர்வு செய்யவுள்ளனர்.