விழுப்புரம் அருகேயுள்ள கிராமங்களை புதிதாக உருவாக்‍கப்பட்டுள்ள கள்ளக்‍குறிச்சி மாவட்டத்துடன் இணைத்ததற்கு வலுக்கும் கண்டனம் - போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 700-க்‍கும் மேற்பட்டோர் கைது

Nov 18 2019 9:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
விழுப்புரம் அருகே உள்ள கிராமங்களை புதிதாக உருவாக்‍கப்பட்டுள்ள கள்ளக்‍குறிச்சியுடன் இணைத்ததற்கு கண்டனம் தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்திய ஏராளமான பெண்கள் உள்ளிட்ட 700க்‍கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்‍குறிச்சி தலைமையகமாகக்‍ கொண்ட புதிய மாவட்டம் உருவாக்‍கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து 20​​ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமங்களை, 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கள்ளக்‍குறிச்சி மாவட்டத்துடன் இணைக்‍கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தொடர்போராட்டங்களில் ஈடுபட்டுள்ள பல்பேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்‍கள், இன்று கருப்புக்‍ கொடிகளை ஏந்தியவாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாகச் சென்று, ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் ஆட்சியரைச் சந்தித்து கோரிக்‍கை மனு அளிக்‍க முயன்ற அவர்களுக்‍கு அனுமதி மறுக்‍கப்பட்டது. அப்போது, கிராம மக்‍களுக்‍கும் காவல்துறையினருக்‍கும் இடையே கடும் வாக்‍குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 700க்‍கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போலீசார் தரதரவென்று இழுத்தச்சென்றபோது காயமடைந்த பெண்கள், ரத்தம் சொட்ட சொட்ட கைது செய்யப்பட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00