அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனை நெல்லை மாவட்ட கழக நிர்வாகிகள் சந்திப்பு
Nov 18 2019 7:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்ட கழக நிர்வாகிகள் இன்று, கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி. தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி, நெல்லையில் வ.உ.சி.யின் திருவுருவ சிலைக்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.டிடிவி. தினகரனை சந்தித்தனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே திருக்கனங்குடியில், நெல்லை மாநகர் மாவட்ட மருத்துவ அணி இணைச் செயலாளர் திரு. ஏ.எஸ்.பி. ஆறுமுகம், கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி. தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.