இட ஒதுக்‍கீடு அடிப்படையில் அரசு ஊழியர்களுக்‍கு​ பதவி உயர்வு வழங்கப்படுவது சட்டவிரோதம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

Nov 15 2019 6:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசு பணிகளில் பதவி உயர்வுக்கும், பணி மூப்புக்கும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட விதிகளை அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு பணி நியமனங்களுக்கு 69 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 2003-ம் ஆண்டு முதல், அரசு பணியில் உள்ளவர்களுக்கு பணிமூப்பு, பதவி உயர்வுக்கு சுழற்சி முறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதனை எதிர்த்து தொடர்பட்ட வழக்கில், சுழற்சி முறையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு தள்ளுப்படி செய்த நிலையில், பணி மூப்பு, பதவி உயர்வுக்கான இடஒதுக்கீட்டை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு, ஊழியர்கள் சட்ட விதியில் திருத்தங்கள் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து, 60-ற்கும் மேற்பட்ட அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுந்தரேஷ், டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழக அரசின் இந்த சட்டவிதிகளை அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனக் கூறியதோடு, மதிப்பெண் தகுதி அடிப்படையில் பணி மூப்பு பட்டியலை 12 வாரங்களுக்குள் புதிதாக தயாரிக்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00