புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு
Nov 15 2019 7:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு, காவல்துறை கண்காணிப்பாளர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ள நிலையில், மேலும் 5 மாவட்டங்களை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து பிரித்து, செங்கல்பட்டு மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரித்து தென்காசி மாவட்டமும், விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டமும், உருவாக்கப்பட்டது.
இதேபோல் வேலூரிலிருந்து பிரித்து, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. புதிதாக உதயமான மாவட்டங்களில் இடம் பெறும் வருவாய் கோட்டங்கள், தாலுகாக்கள் எவை என்பது குறித்து, சில நாட்களுக்கு முன்பு அரசாணை வெளியிடப்பட்டது.
இந்தநிலையில் புதிதாக உதயமான மாவட்டங்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக திரு.பி.விஜயகுமார், தென்காசி மாவட்ட எஸ்.பி.யாக திரு.ஜி.சுகுணா சிங், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக திரு.டி.ஜெயச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், செங்கல்பட்டு எஸ்.பி.யாக திரு.டி.கண்ணன், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாக திரு.ஏ.மயில்வாகனன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆட்சியர்கள் நியமனம்
புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு, ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 32 மாவட்டங்கள் உள்ள நிலையில் திருப்பத்தூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டன. இந்த மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய 5 பேரையும் ஆட்சியராக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி ஆட்சியராக திரு.கிரண் குராலா, செங்கல்பட்டு ஆட்சியராக திரு.ஏ.ஜான் லூயிஸ், ராணிப்பேட்டை ஆட்சியராக திருமதி.திவ்ய தர்ஷிணி, தென்காசி ஆட்சியாராக திரு.அருண் சுந்தர் தயாளன் மற்றும் திருப்பத்தூர் ஆட்சியராக திரு.சிவன் அருள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.