மதுரை கண்மாயில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய தனியார் நிறுவன கண்காணிப்பாளர் கைது - நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் இயக்குநரை தீவிரமாக தேடும் காவல்துறை

Nov 15 2019 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை வீரபாஞ்சன் கண்மாயிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவுகள், முழுமையாக அகற்றப்பட்டதுடன், அவற்றைக் கொட்டிய தனியார் நிறுவன கண்காணிப்பாளரும் கைது செய்யப்பட்டார். நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் இயக்குநரை, போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை வீரபாஞ்சான் கண்மாயில், டன் கணக்கில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதை, ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சி, அம்பலப்படுத்தியது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரையடுத்து, கருப்பாயூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஒத்தப்பட்டி பகுதியில் செயல்பட்ட ப்ளாஸ்டிக் கழிவுகள் தரம் பிரிக்கும் நிறுவனத்தில் இருந்து, 8 லாரிகளில், ப்ளாஸ்டிக் மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது தெரியவந்ததால், அந்த நிறுவனத்தின் கண்காணிப்பாளர் நவின்குமார் கைது செய்யப்பட்டார். நிறுவன உரிமையாளர் காதர் மைதின், இயக்குனர் நைனார் முஹம்மது ஆகிய இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர். 3 பேர் மீதும், நீர்நிலையை அசுத்தப்படுத்தியது, பொதுஇடத்தை அனுமதியின்றி பயன்படுத்தியது என, இரு பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, கண்மாயிலிருந்து எடுக்கப்பட்டு சாலையில் கொட்டப்பட்ட கழிவுகள், அந்த நிறுவனத்தின் மூலமாகவே அவனியாபுரம் வெள்ளக்கல் குப்பை எரியூட்டும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, முழுமையாக அகற்றப்பட்டது. இதேபோன்று, மாவட்டத்தில் வேறு ஏதேனும் பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதுடன், கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00