தாயை பார்க்கச்சென்ற மகளை கொடூரமாக தாக்கிய தந்தை - சிசிடிவி ஆதாரத்தால் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை

Nov 15 2019 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், தாயை பார்க்கச்சென்ற மகளை, கொடூரமாக தாக்கிய தந்தையை, சிசிடிவி ஆதாரத்தை வைத்து, போலீசார் தேடி வருகின்றனர்.

கொடிமர தெருவில் வசித்து வரும் கூலித் தொழிலாளியான அப்துல்சமது என்பவருக்கும், அவரது மனைவி மும்தாஜூக்கும் இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, அப்துல்சமது, அடித்து துன்புறுத்தியதால், மும்தாஜை, அவரது பெற்றோர் அழைத்துச் சென்றுவிட்டனர். ஆனால், 2 குழந்தைகளை தாயுடன் அனுப்பாமல், அப்துல், தன்னுடனேயே வைத்துள்ளார். இந்நிலையில், மகள் அரபுநிஷா, பள்ளி முடிந்து, தனது தாயை பார்த்துவிட்டு, வீட்டிற்கு வந்துள்ளார். இதையறிந்த அப்துல், தாயை பார்க்கச்சென்றதற்காக மகளை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும், தாய் இருக்குமிடத்தை கேட்டு கடுமையாக தாக்கியதால், அலறியடித்து வெளியே வந்த சிறுமியை, அப்போதும் விடாது, கீழே தள்ளி கழுத்தில் மிதித்து, ட்யூப்லைட்டால் கொடூரமாக தாக்கினார். இந்த காட்சி, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. சிறுமி தாக்கப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு அப்துல்லை தாக்கியதால், அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். பின்னர், அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின்பேரில், சிறுமியை மீட்ட போலீசார், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிசிடிவி ஆதாரத்தை வைத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய அப்துலை தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00