நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு : உயர்நீதிமன்றத்தில் விஷால் தரப்பு முறையீடு

Nov 8 2019 7:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் விஷால் தலைவராக இருக்‍கும் நிலையில் அதற்கு தனி அதிகாரியை நியமித்து அரசு உத்தரவிட்டது. தற்போது, நடிகர் சங்கத்திற்கும் தனி அதிகாரி நியமித்து உதவிட்டுள்ளது. நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை நியமித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நடிகர் விஷால் தரப்பினர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலுவிடம் முறையிட்டுள்ளனர். 3 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ள சங்கத்தில், மூன்று உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தனி அதிகாரி நியமித்தது சட்டவிரோதமானது என மனுவில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் தனி அதிகாரி நியமித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் - தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக்‍ கோரி தாக்கல் செய்யப்பட்டிருக்‍கும் மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் எனவும் நடிகர் விஷால் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, நீதிபதி ஆதிகேசவலு, நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணையில் உள்ளதால், இந்த வழக்கை அவர் முன் பட்டியலிட பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00