தமிழகத்தில் பரவும் மர்மக்‍ காய்ச்சல் : ராமநாதபுரத்தில் 8 பேர் சிகிச்சைக்‍காக அனுமதி - பெரம்பலூர் மாவட்டத்தில் நூற்றுக்‍கணக்‍கானோருக்‍கு மர்மக்‍ காய்ச்சல்

Nov 8 2019 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் டெங்கு போன்ற காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சலால் பாதிக்‍கப்பட்ட பலர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்‍கப்பட்டு சிசிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் திருநெல்வேலி, பெரம்பூலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

ராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்‍கப்பட்ட 8 பேர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு இரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மர்ம காய்ச்சலால் பாதிக்‍கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் அருகே மர்ம காய்ச்சலால் இதுவரை 15க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததால், தொண்டமாந்துறை கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கடந்த 15 நாட்களாக இக்கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை, லட்சுமி, சாவித்ரி, தனக்கொடி, வரதராஜ் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் உள்ளாட்சித் துறையும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00