அரசியலுக்கு வந்த பின்னரும் தாய்வீடான சினிமாவை கமல்ஹாசன் மறக்கவில்லை : நடிகர் ரஜினிகாந்த்

Nov 8 2019 1:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசியலுக்கு வந்த பின்னரும் தாய்வீடான சினிமாவை கமல்ஹாசன் மறக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இயக்‍குனர் கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் உரையாற்றிய நடிகர் ரஜினிகாந்த், நேற்றும், இன்றும் கமல்ஹாசனுக்‍கு மறக்க முடியாத நாட்கள் என கூறினார். நேற்று தனது தந்தையின் சிலையை பரமக்குடியில் திறந்து வைத்த கமல், இன்று கலையுலக தந்தையின் சிலையை திறந்து வைத்துள்ளார் என ரஜினி தெரிவித்தார். படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசன் தூங்குவதை கூட கே.பாலச்சந்தர் பார்த்து ரசிப்பார் என்றும் தனது நினைவுகளை ரஜினி பகிர்ந்து கொண்டார்.

அபூர்வசகோதரர்கள் படம் பார்த்து நள்ளிரவு நேரத்தில் கமல் வீட்டுக்கு நேரில் சென்று பாராட்டியதாகவும், தேவர்மகன் திரைப்படம் மிகப்பெரிய காவியம் என்றும், ஹேராம் திரைப்படத்தை 30 முதல் 40 முறை பார்த்துள்ளதாகவும் ரஜினிகாந்த் கூறினார். அரசியலுக்கு வந்த பிறகும் தாய்வீடான சினிமாவை கமல் மறக்கமாட்டார் என்பது நிரூபணமாகியுள்ளதாக ரஜினி குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00