சென்னையை அச்சுறுத்தும் காற்று மாசு - டெல்லியைவிட நுண்துகள் அளவு அதிகரித்திருப்பது ஆய்வில் கண்டுபிடிப்பு

Nov 8 2019 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியை விட சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், தொடா்ந்து 4-ஆவது நாளாக காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. நேற்று ஒரே நாளில் 48 புள்ளிகள் அளவிற்கு காற்று மாசு உயர்ந்துள்ளதாக ஆய்வில் திடுக்‍கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகா் டெல்லியில் கடந்த ஒருவாரமாக காற்றுமாசு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தில்லியைத் தொடா்ந்து, சென்னையிலும் 4-ஆவது நாளாக நேற்று காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது.

காற்றில் மிதக்கும் நுண் துகள்களின் அளவு PM 10, PM 2.5 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், காற்றில் மிதக்கும் நுண்துகள் PM 2.5-இன் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவான 60 மைக்ரோ கிராமை விட கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகரித்து வருகிறது.

சென்னையில் நேற்று காலை 9.30 மணி அளவில் டெல்லியைவிட காற்றுமாசு அதிகரித்து இருந்ததாக தனியார் காற்றுத் தர ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லியில், அப்போது காற்றில் மிதக்கும் நுண்துகள் அளவு 254 மைக்ரோ கிராமாக இருந்த நிலையில், சென்னையில் 264 மைக்ரோ கிராம் இருந்தது.

குறிப்பாக, வேளச்சேரி, ராமாபுரம், மணலி, கொடுங்கையூா், அண்ணா நகரில் சராசரி காற்றுமாசு 341 புள்ளிகளாக இருந்தது. இதில், அதிகபட்சமாக, வேளச்சேரி மற்றும் ஆலந்தூரில் 273 புள்ளிகளாக இருந்தது.

'சென்னையில் வறண்ட வானிலை நிலவி வருவதால் நாளை வரை காற்றுமாசு அதிகரித்து காணப்படும் வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வடகிழக்குப் பருவமழை ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்‍கப்படுகிறது என கூறியுள்ளது. அவ்வாறு மழை தொடங்கும்பட்சத்தில் காற்றுமாசு குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00