திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : சுரேஷிற்கு 15 நாள் நீதிமன்ற காவல் - புதைத்து வைக்கப்பட்ட 1.5 கிலோ தங்கம் பறிமுதல்

Oct 21 2019 8:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேசின் போலீஸ் காவல் நிறைவடைந்ததை அடுத்து, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷிற்கு, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற வங்கிக் கொள்ளையிலும் தொடர்பு இருந்ததை அடுத்து, அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. கடந்த 14-ம் தேதி சுரேஷை காவலில் எடுத்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், கல்லணை பகுதியில் மண்ணில் புதைத்து வைத்திருந்த ஒன்றரை கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

இன்றுடன் போலீஸ் காவல் நிறைவடைந்ததை அடுத்து, சுரேஷ், பலத்த பாதுகாப்புடன் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை சம்பவத்தில், சுரேஷை மீண்டும் போலீஸ் காவலில் எடுக்க தாக்கல் செய்யப்பட்ட மனு, நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00