பொள்ளாச்சி அருகே பெற்ற குழந்தையை பணத்திற்கு விற்ற தந்தை : மீண்டும் குழந்தையை கேட்டு காவல் நிலையத்தில் புகார்

Oct 17 2019 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொள்ளாச்சி அருகே பெற்ற குழந்தையை பணத்திற்கு விற்ற தந்தை, மீண்டும் குழந்தையை கேட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தென்காசி அடுத்துள்ள வடகரைபகுதியை சேர்ந்த கருப்புசாமி, ரம்யா தம்பதியினர் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு பகுதியில் குடியேறி கூலி வேலை செய்து வந்தனர். ரம்யாவுக்கு இருதயநோய் ஏற்பட்டதால் அவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தையை வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொள்ளாச்சி அடுத்த குருஞ்சேரி பகுதியை சேர்ந்த, குழந்தை இல்லாத குப்புசாமி, சண்முகப்பிரியா தம்பதியினருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 40,000 ரூபாய்க்கு, குழந்தையை, கருப்புசாமி விற்றுவிட்டார்.

இதில் இடைத்தரகராக கார்த்திக் மற்றும் குறுஞ்சேரியைச் சேர்ந்த முருகன் இருந்துள்ளனர். இந்நிலையில் ரம்யா கடந்த மாதம் இறந்த நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு சண்முகப்பிரியா குப்புசாமி ஆகியோரை தொடர்புகொண்ட கருப்புசாமி தனது குழந்தையை மீண்டும் கொடுத்து விடுங்கள் என்று கேட்டுள்ளார். அவர்கள் கொடுக்க மறுப்பதால் கருப்புசாமி மகாலிங்கபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இரு தரப்பினரையும் அழைத்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00