டெங்கு காய்ச்சலை தடுக்‍க தீவிர நடவடிக்‍கை - அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில் தமிழகம் முழுவதிலும் நிலவேம்பு குடிநீர் தொடர்ந்து விநியோகம்

Oct 16 2019 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கி வருகின்றனர்.

கடலூர் வடக்கு மாவட்டம் விருத்தாச்சலம் நகர கழகம் சார்பில், பாலக்கரை, உழவர் சந்தை ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. விருத்தாசலம் நகர பொறுப்பாளர் திரு. தியாக. ரத்தினராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. அக்ரி.பி.முருகேசன், வியாபாரிகள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் ராஜா பழனிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஈரோடு மாநகர் மாவட்டம் அக்ரஹாரம் பகுதி கழகம் சார்பில், வண்டிப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை, மாவட்டச் செயலாளர் திரு. டி. தங்கராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பொருளாளர் திரு. தரணி சண்முகம், எம்ஜிஆர் மன்ற செயலாளர் திரு. லோகநாதன், இணை செயலாளர் திரு. அர்ஜுனன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம் திருமருகல் வடக்கு ஒன்றிய கழகம் சார்பில், நடுக்கடை கிராமத்தில், நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியை மாவட்ட கழக செயலாளர் திரு. ஆர். சந்திரமோகன் தொடங்கி வைத்தார். இதில் திருமருகல் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. மோகன்காந்தி உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் போச்சம்ப்பள்ளி ஒன்றிய கழகம் சார்பில், அரசம்ப்பட்டியில், நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. கணேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு, குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கி சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் திரு. மன்னன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00