தேனியில் மசாலா பொருட்கள் தயாரிக்‍கும் நிறுவனத்தில் தீ விபத்து : மசாலா பொருட்களின் நெடி, கண் எரிச்சலால் தீ அணைப்பதில் பின்னடைவு

Oct 14 2019 6:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேனியில், தனியாருக்கு சொந்தமான மசாலா பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீயை அணைக்‍கும் முயற்சியில், பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பகுதியில் மசாலா பொருட்கள் தயாரிக்‍கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் ஒரு பகுதியில் சிறிய அளிவில் ஏற்பட்ட தீயானது, மளமளவென அனைத்து பகுதிகளுக்‍கும் பரவியது. மேலெழுந்த கரும்புகையால் சுற்றுவட்டார பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான, மசாலா பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. வேகமாக பரவி வரும் தீயை அணைக்‍க முடியாமல், தீயணைப்பு வீரர்கள் போராடினர். மேலும், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்தும் கூடுதல் தீயனைப்பு வாகனங்கள் வரவழைக்‍கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனிடையே மசாலா பொருட்களின் நெடி மற்றும் அதனால் ஏற்பட்ட கண் எரிச்சலால் தீயை அணைக்‍கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00