டெங்கு தடுப்பு பணியில் அ.ம.மு.க. - தமிழகம் முழுவதும் கழகம் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்

Oct 14 2019 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கி வருகின்றனர்.

அனகாபுத்தூர் நகரக் கழகச் செயலாளர் திரு. பிரகாஷ் தலைமையில், அனகாபுத்தூர் பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. கரிகாலன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் திரு. தாம்பரம் நாராயணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விருதுநகர் கிழக்கு மாவட்டம் காரியாபட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில், ஆவியூர், தோப்பூர் ஆகிய கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க, நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. M.P. ஜெயராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவர் திரு. கே.கே.சிவசாமி உட்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. ஜெயப்பிரகாஷ் திருமானூர் பேருந்து நிலையத்திலும், திருமானூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வடிவேல் முருகன் கீழப்பழூர் பகுதியிலும் பொதுமக்‍களுக்‍கு நிலவேம்பு குடிநீரை வழங்கினர். இந்நிகழ்ச்சிகளில், அரியலூர் மாவட்ட செயலாளர் துரைமணிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநிலத் தலைவர் திரு ஆர்.பாலு தலைமையில் தருமபுரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில், நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதில், தருமபுரி மாவட்ட கழக செயலாளர் திரு டி.கே.ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட செயலாளர் தொப்பூர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மாவட்ட கழக செயலாளர் திரு.எஸ். கலைச்செல்வன் தலைமையில் கழக அமைப்புச் செயலாளர் திரு.தேனாடு லட்சுமணன், கழக சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் திரு.தம்பி இஸ்மாயில் ஆகியோர் கோத்தகிரி பேருந்து நிலையத்தில் நிலவேம்பு குடிநீரை பொது மக்களுக்கு வழங்கினர். இதில் கழக மாவட்ட அவை தலைவர் திரு.கே.என்.துரை, ஒன்றிய செயலாளர் திரு.கிருஷ்ணன், கழக பேரூராட்சி செயலாளர் திரு.வாட்பு, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திரு.விசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00