மேகதாது உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்கக்‍கூடாது - மத்திய அமைச்சர்களுக்‍கு தமிழக அரசு கடிதம்

Oct 10 2019 5:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்‍கு அனுமதி அளிக்‍கக்கூடாது என மத்திய அமைச்சர்கள் திரு. கஜேந்திர சிங் மற்றும் திரு. பிரகாஷ் ஜவடேகருக்‍கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி கேட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் கர்நாடக அரசு விண்ணப்பித்தது. அதை பரிசீலித்த மத்திய அரசு, தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தி சுமூக தீர்வுக்கு வருமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு கடந்த வாரம் கடிதம் எழுதியது. அதில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவை இல்லை என்பதால், மத்திய அரசு, கர்நாடகாவுக்‍கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தின் அனுமதியின்றி, காவிரியின் குறுக்‍கே மேகதாது உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் கர்நாடகாவிற்கு ஒப்புதல் வழங்கக்‍கூடாது என மத்திய நீர் வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகருக்‍கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00