மாமல்லபுரத்தில் வெளியாட்கள் நுழைய தடை விதிப்பு - பாதுகாப்பு கெடுபிடியால் வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்‍குள் முடங்கும் உள்ளூர்வாசிகள்

Oct 10 2019 4:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீன அதிபர் வருகையையொட்டி, மாமல்லபுரத்தில் போலீசாரின் கடுமையான கெடுபிடிகள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்‍களும் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கெடுபிடியால் உள்ளூர்வாசிகள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்‍குள் முடங்கிக்‍கிடக்‍கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிரதமர் திரு.மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகச் செய்து வருகின்றன. ஒட்டு மொத்த அரசு எந்திரமும் மாமல்லபுரத்தில் குவிக்கப்பட்டு அங்குலம் அங்குலமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பார்வையாளர்கள் அனுமதி கிடையாது என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், தென் மாவட்டங்கள் மற்றும் வெளி மாநில, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாமல்லபுரம் தெருக்களில் தள்ளுவண்டிக் கடைகள் ஒன்று விடாமல் அகற்றப்பட்டு விட்டன. இந்த வருமானத்தில் பிழைக்கும் பலரும் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். மேலும், இப்பகுதியில் மீன்பிடிக்‍கும் மீனவர்கள் கடலுக்‍குச் செல்ல அனுமதி மறுக்‍கப்பட்டுள்ளதால், அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மொத்தத்தில் சீன அதிபரின் வருகையையொட்டி, மாமல்லபுரத்தில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக, அப்பகுதி மக்‍களின் இயல்பு வாழ்க்‍கை முடங்கும் சூழல் நிலவி வருகிறது. உள்ளூர்வாசிகளும் வீடுகளுக்‍குள் முடங்கிக்‍கிடக்‍கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00