மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்‍கும் மாமல்லபுரம் கலைச் சிற்பங்கள் - பிரதமர் மோடி-சீன அதிபர் வருகையால் நகரமே விழாக்‍கோலம்

Oct 10 2019 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் திரு.மோடி - சீன அதிபரின் வருகையை முன்னிட்டு, பல்லவ மன்னர்களால் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட சிற்பங்கள் உட்பட அனைத்து கலைச் சிற்பங்களும் மின்விளக்கு வெளிச்சத்தில் பிரம்மாண்டமாய் காட்சியளிக்கின்றன.

பிரதமர் திரு.நரேந்திரமோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்திற்கு நாளை வருகை தருகின்றனர். இதனை முன்னிட்டு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள், இரவு பகலாக பணிபுரிந்து வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத வகையில், பல்லவ மன்னர்களால் செதுக்கப்பட்ட புகழ்பெற்ற வெண்ணெய் திரட்டி பாறை, அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், இந்த அரியவகை சிற்பங்கள், வழக்கத்தை விட மின்னொளியில் பிரம்மாண்டமாய் காட்சியளிக்கின்றன. இந்தக்‍ கண்கொள்ளாக்‍ காட்சி, சுற்றுலா பயணிகளை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இதேநிலை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

இதனிடையே, மாமல்லபுரத்தில், முன்னேற்பாடுகளுக்‍காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை மோப்ப நாய்கள் வரவழைக்‍கப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஐந்து ரதம் அர்ஜுனன் தபசு ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்திய தேசியக் கொடி மற்றும் சீனா தேசிய கொடி கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக ஐந்திரம் என்ற பகுதியில் இந்த கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு காவல்துறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாமல்லபுரம் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00